முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவிவரும் காட்டுத் தீ

முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் பரவி வரும் காட்டு தீயை ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்கும் பணியில் வன ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் கர்நாடக மாநிலம் பந்திப்பூர் தேசிய பூங்கா ஆகிய இரு வனப்பகுதியில் சில தினங்களுக்கு முன்பு பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டது . இந்த காட்டுத் தீயால் பந்திப்பூர் தேசியப் பூங்காவில் 500 ஹெக்டேர் அளவுக்கு வனப் பகுதிகள் எரிந்து சாம்பலாகின. இந்தநிலையில்,4வது நாளாக இன்றும் பந்திபூர் புலிகள் தேசிய பூங்காவில் காட்டுத் தீ எரிந்து வருகிறது.

தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ, காற்றின் வேகம் அதிகமானதால் முதுமலை புலிகள் காப்பகத்தில் பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் 300க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டுவரும் நிலையில், ஹெலிகாப்டர் மூலமும் தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காட்டுத் தீயால் ஏராளமான வனவிலங்குகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version