குற்றச்சாட்டுக்களுக்கு இடையே இன்று நடைபெற உள்ள ரிசர்வ் வங்கியின் நிர்வாக குழு கூட்டத்தில் கவர்னர் உர்ஜித் படேல் தமது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் அதிகரித்திருக்கும் வாராக்கடன் பிரச்சனை தற்போது விஷ்வரூபம் எடுத்து வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் ரிசர்வ் வங்கியின் மத்திய குழுக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கியின் மத்திய குழு என்பது பல்வேறு துறைகளின் சிறந்து விளங்கும் சாதனையாளர்களின் அவையாக இருக்கிறது.
டாடா குழும தலைவர் சந்திரசேகரன், சன் பார்மா எம்.டி திலிப் சாங்வி எனப் பலர் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இதில் ஆடிட்டர் குருமூர்த்தி உள்ளிட்ட சிலர் ஆர்.பி.ஐ க்கு எதிரான தங்கள் கருத்தை ஏற்கனவே பதிவு செய்துள்ளனர். அதனால் இன்று நடைபெறும் கூட்டத்திலும் ஆர்.பி.ஐ க்கு எதிராக உறுப்பினர்கள் கருத்து பதிவிட வாய்ப்புள்ளது. இதனால் இந்தக் கூட்டத்தில் உர்ஜித் படேல் தமது பதவியை ராஜினாமா செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.