மத்திய அரசுக்கு இடைக்கால உபரித்தொகையாக 28 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
மத்திய அரசுக்கு, ஆண்டுதோறும் ரிசர்வ் வங்கி உபரித் தொகை கொடுப்பது வழக்கம். அந்த வகையில் 2017 – 18 ஆம் ஆண்டில், மத்திய அரசுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் உபரி தொகையை வழங்கியது. ரிசர்வ் வங்கியிடம், 28 ஆயிரம் கோடி ரூபாய் இடைக்கால உபரி தொகையாக கொடுக்க மத்திய அரசு வலியுறுத்தியது. இந்நிலையில், மத்திய ரிசர்வ் வங்கியின் வாரியக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மத்திய அரசுக்கு 28 ஆயிரம் கோடி உபரி தொகை வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.