அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையேயான முந்தைய உறவு குறித்து கருத்து கூற முடியாது என சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். உர்ஜித் பட்டேல் ராஜினாமா செய்ததை தொடர்ந்து சக்திகாந்த தாஸ் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இன்று பதிவியேற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் சந்தித்த அவர், ரிசர்வ் வங்கியில் மத்திய அரசு ஒரு பங்குதாரர் மட்டுமல்ல, நாட்டின் நிதிநிலையை நிர்வகிக்கும் சூழல் அரசுக்கும் உள்ளதாக கூறினார். வங்கித் துறையை நிர்வகிப்பது மட்டுமின்றி நாட்டின் பொதுவான நிதிநிலையை கண்காணிப்பதும் ரிசர்வ் வங்கியின் பணி என்று கூறிய அவர், நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை சந்திக்கும் நிலையில், ரிசர்வ் வங்கியும், அரசும் இணைந்து அவற்றை எதிர்கொள்ளும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி வரம்புக்கு உட்பட்ட அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க தயாராக உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.