பொறியியல் கலந்தாய்வு முடிவில் 83,396 மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை இந்தாண்டு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தியது. கடந்த மாதம் 25ஆம் தேதி முதல் தொடங்கிய முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. பொறியியல் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1லட்சத்து 72 ஆயிரத்து 148 இடங்களில், 1லட்சத்து 42 ஆயிரத்து 755 இடங்கள் அரசு ஒதுக்கீடு இடங்களாக உள்ளன. இந்த இடங்களுக்கான முதற்கட்ட கலந்தாய்வில் 78 ஆயிரத்து 47 பேர் இட ஒதுக்கீட்டு ஆணை பெற்றிருந்தனர். இதை தொடர்ந்து, சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியியல் துணை கலந்தாய்வு நேற்று இரவு தொடங்கி இன்று அதிகாலை வரை நடைபெற்றது. இதை தொடர்ந்து பொறியியல் கலந்தாய்வின் முடிவில் 83 ஆயிரத்து 396 பேர் இட ஒதுக்கீட்டு ஆணை பெற்றுள்ளனர்.

Exit mobile version