இடஒதுக்கீடு சட்டத்திருத்த மசோதா : மாநிலங்களவையில் நிறைவேறியது

காரசார விவாதத்திற்கு பிறகு பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, மக்களவையில் நிறைவேறியது. நாடு முழுவதும் பொதுப்பிரிவில் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு, கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.

இதன்மூலம், இடஒதுக்கீடு உச்சவரம்பு 60 சதவீதமாக அதிகரிக்கும் என்பதால், அரசியல் அமைப்பு சட்டத்தின் 15 மற்றும் 16வது ஷரத்துகளில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான மசோதா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா குறித்து 4 மணி நேரத்திற்கும் மேலாக காரசார விவாதம் நடைபெற்றது.

இறுதியாக, 323 எம்.பிக்கள் ஆதரவுடன், பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது. இதனிடையே, இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

Exit mobile version