ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு : விலங்குகள் நல வாரியம்

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள், விதிகளுக்கு உட்பட்டு நடக்கிறதா என்பதை, இந்திய விலங்குகள் நல வாரியம், மூன்று நாட்கள் ஆய்வு செய்கிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது. இந்த நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகளில் விதிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய, இந்திய விலங்குகள் நல வாரியம் முடிவு செய்துள்ளது.

அதன் தலைவர் எஸ்.பி.குப்தா, ஜல்லிக்கட்டு ஆய்வுக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.கே.மிட்டல் ஆகியோர் நேற்று தமிழகம் வந்தனர். அவர்கள் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஆய்வு செய்கின்றனர். சென்னை, பெரம்பலூர் மற்றும் திருச்சியில் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.

Exit mobile version