அரசு மருத்துவமனைகளில் சுகாதாரம் குறித்து ஆய்வு

மேலூர் அருகே அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதாரம் குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேரில் ஆய்வு நடத்தினார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, மேலூர் ஆகிய அரசு மருத்துவமனைகளில் நிலவும் சுகாதார வசதி குறித்து மாவட்ட ஆட்சியர் நாகராஜன் நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகள், மருந்துகள் கொள்ளிருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் மேலூர் நகராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் குடிநீர் பிரச்னை தொடர்பாகவும், அலுவல் சார்ந்த ஆய்வு பணிகளையும் மாவட்ட ஆட்சியர் நாகராஜன் சோதனை மேற்கொண்டார். இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மாவட்ட அளவில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க காவிரி கூட்டுகுடிநீர், வைகை நீர் மூல சீரான குடிநீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.

Exit mobile version