கோவையில் வாடகைக்கு எடுக்கப்பட்டு, பின்னர் கடத்தப்பட்ட கார் பரமக்குடியில் மீட்கப்பட்டுள்ள சம்பவம் தொடர்பாக, கடத்தலில் ஈடுபட்டவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த அருண்சங்கர் ஜூலை 27ம் தேதி தனது காரை நண்பர் பாட்ஷாவிற்கு மாத வாடகைக்கு கொடுத்துள்ளார். ஒரு மாதத்திற்கான வாடகை மட்டுமே கொடுத்த நிலையில் காரை திருப்பி அளிக்காமல், வாடகையும் கொடுக்காமல் பாட்ஷா ஏமாற்றி உள்ளதாக தெரிகிறது. ஜிபிஎஸ் கருவி மூலம் காரை தொடர்ந்து கண்காணித்து பரமக்குடி பொன்னையாபுரம் அருகே காரை அருண் சங்கர் மீட்டுள்ளார். தொடர்ந்து பாட்ஷா மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் பாட்ஷாவை தேடி வருகின்றனர்.