உத்தரகண்ட் மாநிலத்தில் பனிபாறை வெடிப்பு – தொடரும் மீட்பு பணிகள்!

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறை வெடித்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்கள் மீட்கும் பணி 2வது நாளாக தொடர்ந்து வருகிறது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பனிப்பாறைகள் வெடித்ததால் சாமோலி மாவட்டத்தில் உள்ள தவுளிகங்கா, ஜோஷிமத் ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளத்தில் சிக்கி 170க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். சாமோலி உட்பட பல்வேறு பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்லை பாதுகாப்பு படையினர் இரண்டாவது நாளாக மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 14 பேரின் உடல்கள் சடலங்களாக மீட்கப்பட்டனர். 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். ஜோசிமாத் பகுதி சுரங்கப்பாதை முழுமையாக சீரமைக்கபட்டு, உள்ளே இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். மீட்பு பணிகள் நடைபெறும் இடங்களுக்கு அருகிலேயே தேவையான உபகரணங்களுடன் மருத்துவர்களும் காத்திருக்கின்றனர்.

 

இதனிடையே மீட்பு பணிகளை நேரில் பார்வையிட்ட மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், உத்தகரகண்டில் நிலவும் சூழல் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரிவித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் ஒருமுறை மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்து வருவதாக கூறினார். மேலும் ஒரு சுரங்கப் பாதையை முற்றிலுமாக சீரமைத்த இந்தோ திபத் எல்லை பாதுகாப்பு படை, இரண்டாவதாக 3 கிலோமீட்டர் நீளமுள்ள மற்றொரு சுரங்கப் பாதையை சீரமைத்து வருவதாக கூறினார்.

 

Exit mobile version