மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 6 வயதுச் சிறுவனைத் தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் உயிருடன் மீட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் விவசாயத்துக்காக அமைத்திருந்த ஆழ்துளைக் கிணறு பயனின்றி இருந்ததால் கைவிடப்பட்டது. திறந்த நிலையில் இருந்த 300 அடி ஆழ்துளைக் கிணற்றில் 6 வயதுச் சிறுவன் தவறி விழுந்து விட்டான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அவர்களுடன் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் இணைந்து மீட்பு முயற்சியில் ஈடுபட்டனர்.ஆழ்துளைக் கிணற்றுக்குள் கயிற்றைச் செலுத்திச் சிறுவனைப் பாதுகாப்பாக உயிருடன் மீட்டனர். சிறுவனை உயிருடன் மீட்ட மீட்புப் படையினருக்குப் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.