ஆன்மீகப்பயணம் மேற்கொண்ட 36 தமிழர்கள் மீட்பு

புனிதப் பயணம் மேற்கொண்ட 36 தமிழர்கள் மீட்கப்பட்டு இந்திய – நேபாள எல்லையில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழகத்திலிருந்து நேபாளத்திற்கு ஆண்மீகப்பயணம் மேற்கொண்ட 36 தமிழர்கள் கொரோனா தாக்கத்தால் தாயகம் திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை மீட்க தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் ஆகியோரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேபாள அதிகாரிகளை தொடர்பு கொண்ட துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும், அதிமுக எம்.பி ரவீந்திரநாத் குமாரும் தவித்து வரும் தமிழர்களை மீட்க கேட்டுக்கொண்டனர். இதனடிப்படையில் நேபாளத்தில் சிக்கிய தமிழர்கள் உடனடியாக மீட்கப்பட்டு இந்திய – நேபாள எல்லைக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் தனியார் விடுதியில் பத்திரமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். உரிய நடைமுறையை பின்பற்றி அவர்கள் தாயகம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார் ஆகிய  இருவருக்கும் மீட்கப்பட்ட தமிழர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version