உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை கோரிய வழக்கு தள்ளுபடி

ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து,சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் முழுவதும்  ஊரக உள்ளாட்சி   தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு கடந்த 27- ம் தேதி நடந்து முடிந்ததை அடுத்து  தற்போது இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் சார்பில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கும் வரை,  ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடை விதிக்கக் கோரி  உயர்நீதிமன்றத்தில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது நீதிபதிகள் வைத்தியநாதன், பி.டி ஆஷா  ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் தொடர்ந்துள்ள வழக்கு வாக்காளர்களின் அறிவை குறைத்து எடை போடுவது போல அமைந்துள்ளதாகக் கூறி அதனைத்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Exit mobile version