அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு வேண்டுகோள்

மகத்தான சாதனை புரிந்து, புதிய சரித்திரம் படைத்திட மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு, தமிழக மக்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து வெளியிட்டுள்ள மடலில், தமிழகமெங்கும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டது, நீரா பானம், மின் வெட்டு ஒழிக்கப்பட்டது, மீத்தேனுக்கு முற்றுப்புள்ளி, காவிரி கோதாவரி இணைப்புத் திட்டம், விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்த அதிமுக அரசை தமிழக மக்கள் உளமாற பாராட்டுவதை குறிப்பிட்டுள்ளனர்.

ஏழை எளிய சாமானியர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை தந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நூறாண்டுகள் கழகமே ஆள வேண்டும் என்ற வேண்டுகோளை உயிர் தந்தும் காத்திடுவோம் என உறுதி ஏற்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாம்பழம், தாமரை, முரசு, ஆட்டோ ரிக்ஷா, ஜக்கு ஆகிய சின்னங்களில் வாக்களித்து, வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு அதிமுக தலைமை வெளியிட்டுள்ள மடலில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மடல்

தமிழகமெங்கும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு பெருக்கெடுத்து ஓடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.. நீர் நிலைகள் தூர்வாரப்பட்டது, நீரா பானம், மின் வெட்டு ஒழிக்கப்பட்டது, மீத்தேனுக்கு முற்றுப்புள்ளி, காவிரி கோதாவரி இணைப்புத் திட்டம், விலையில்லா அரிசி, தாலிக்கு தங்கம், திருமண உதவித் தொகை உள்ளிட்ட திட்டங்கள் மூலம் நல்லாட்சிக்கு இலக்கணம் வகுத்த அதிமுக அரசை தமிழக மக்கள் உளமாற பாராட்டுவதை குறிப்பிட்டுள்ளனர்.  ஏழை எளிய சாமானியர்கள் லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பச்சை மையில் கையெழுத்திடும் பாக்கியத்தை தந்த, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நூறாண்டுகள் கழகமே ஆள வேண்டும் என்ற வேண்டுகோளை உயிர் தந்தும் காத்திடுவோம் என உறுதி ஏற்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் மற்றும் கூட்டணி கட்சிகளின் மாம்பழம், தாமரை, முரசு, ஆட்டோ ரிக்ஷா, ஜக்கு ஆகிய சின்னங்களில் வாக்களித்து, வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு அதிமுக தலைமை வெளியிட்டுள்ள மடலில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version