பழமையான வாலாஜாபாத் ரோடு ரயில்நிலையத்தை மேம்படுத்த கோரிக்கை

163 ஆண்டு கால பழமையான வாலாஜாபாத் ரோடு ரயில் நிலையத்தை மேம்படுத்த கோரி, அதிமுக ராஜ்யசபா எம்.பி முகமது ஜான், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகுல் ஜெயினை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயணிகள் நலன் கருதி, முக்கிய விரைவு ரயில்களை வாலாஜாபாத் ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்ற கோரிக்கையை பொது மேலாளரிடம் வலியுறுத்தியதாக கூறினார். 

Exit mobile version