தண்ணீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கொள்கை மற்றும் திட்ட இணை செயலாளர் திருப்புகழ் கேட்டுக் கொண்டுள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜல் சக்தி அபியான் இயக்கம் மூலம் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரைச் சேகரித்து நிலத்தடி நீரை உயர்த்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
நீர் பற்றாக்குறையாக உள்ள சேலம் மாவட்டத்தை உபரி நீர் மாவட்டமாக மாற்றவதற்கு மழைநீரை சேமிக்கவும், அதனை திட்டமிட்டு பயன்படுத்தவும் வல்லுனர் குழுவினர் உதவுவார்கள் என்று திருப்புகழ் கூறினார். நீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்பது பிரதமரின் விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.