நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் தனியார் தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலையின் வரத்து அதிகமாக காணப்படுகிறது.
பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்காமல், விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். திமுக அரசும், கிலோ ஒன்றுக்கு 12 ரூபாய் மட்டுமே விலை நிர்ணயம் செய்துள்ளதால், கூலி வழங்க கூட முடியாத நிலை உள்ளதாக தேயிலை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் பசுந் தேயிலைக்கு கிலோ ஒன்றுக்கு 28 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்து வழங்கியது போல், தற்போதும் விலை நிர்ணயம் செய்யவேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.