திமுக வினரின் அராஜக செயல்களால், சென்னை போரூர் ஏரி தற்போது குப்பைகளை கொட்டும் குப்பை கிடங்காக மாறிவருகிறது. இந்த அவலத்தை பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.
செம்பரம்பாக்கம் ஏரி ,போரூர் ஏரி உள்ளிட்ட ஏரிகள் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களின் குடிநீர் ஆதரமாக விளங்கி வருகின்றன. இந்நிலையில் தற்போது பருவமழை சரிவர பெய்யாததால் சென்னை மக்கள் குடிநீர் பஞ்சத்தினால் அவதி படாமல் இருக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் சென்னை போரூர் ஏரியில் அப்பகுதியை சேர்ந்த சிலர் லாரிகள் மூலம் குப்பைகளை கொண்டு வந்து ஏரியில் கொட்டி வருகின்றனர்.தொடர்ந்து இதுப்போல் குப்பைகளை கொட்டி வருவதால் தற்போது போரூர் ஏரியே குப்பை மேடாக காட்சியளிக்கிறது.
போரூர் பகுதியை சேர்ந்த ஏ.என்.இ என்கிற தனியாருக்கு சொந்தமான லாரிகளில் இருந்து தான் தினந்தோறும் குப்பைகள் கொட்டபட்டு வருகின்றன.மேலும் இந்த தனியார் லாரிகளின் உரிமையாளர் போரூர், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கம்பெனி மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து கழிவுகளை ஒப்பந்த முறையில் எடுத்து வந்து, ஏரியில் கொட்டி வருகின்றார்.
இந்த தொகுதியை சேர்ந்த மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு ,மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தாமோ அன்பரசன் ஆகிய இரண்டு பேரிடமும் இது குறித்து மக்கள் மனு அளித்துள்ளனர்.ஆனால் அவர்களும் இதை கண்டு கொள்ளாமல் கிடப்பில் போட்டுள்ளனர்.தற்போது இந்த குப்பைகளை கொட்டி வருபவர் அப்பகுதியை சேர்ந்த திமுக வின் முக்கிய புள்ளி என்பதால் அவர்கள் இருவரும் இதை கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இவ்விதம் கொட்டபடும் குப்பைகளை அவர்கள் எரித்து விட்டு செல்வதால், குப்பைகளில் உள்ள நெகிழிதாள்கள் எரிந்து வெளிவரும் நச்சு புகையால்,குழந்தைகளுக்கு சுவாச கோளாறு, ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்
அனைத்து நம்பிக்கையையும் இழந்துள்ள அப்பகுதி மக்கள், தங்கள் பகுதி குடிநீர் ஆதாரமாக விளங்கும் போரூர் ஏரியை சமூக விரோதிகளிடம் மீட்டு தர வேண்டும் எனவும், இவ்விதம் அராஜக போக்கில் ஈடுபடும் திமுக வை சேர்ந்த நபர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.