கிருஷ்ணகிரி அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த கோவிலை சீரமைக்க கோரிக்கை

கிருஷ்ணகிரி அருகே 13ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான குந்தீஸ்வரர் கோவிலை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சின்ன கொத்தூர் கிராமத்தில் உள்ள குந்தீஸ்வரர் கோவில், மாவட்டத்தின் பெரிய கற்கோவிலாக திகழ்கிறது. இந்த கோவில் தற்போது பராமரிப்பு இல்லமால் சேதமடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இரவு நேரங்களில் சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாகவும் கூறினார். தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு பழமையான கோவிலை பாதுகாக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version