மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கோரிக்கை

குறுவை சாகுபடிக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை என்று புகார் தெரிவித்து இருக்கும் திருவாரூர் விவசாயிகள், மேட்டூர் அணைகளில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு குறுவை சாகுபடி பணிகளுக்காக கடந்த ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திருவாரூர் மாவட்டத்தில் ஆறுகளில் வந்தடைந்த பிறகும் வாய்க்கால்களுக்கு வரவில்லை. மேட்டூர் அணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டதே இதற்கு காரணம் என்பது திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் புகார் ஆகும்.

 

பொதுப்பணித்துறை அதிகாரிகள் தண்ணீரை பகிர்ந்து அனைத்து பகுதிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் மெத்தனத்தா, சுமார் 50 ஆயிரம் ஏக்கர் குறுவை சாகுபடி பொய்த்துப்போகும் என்பதும் திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் வேதனையாக இருக்கிறது.

Exit mobile version