ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கும் நீரை வெளியேற்ற கோரிக்கை

கரூர் அருகே ரயில்வே சுரங்கப் பாதையில் அடிக்கடி நீர் தேங்குவதை தடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

லாலாப்பேட்டை ரயில்வே கேட் அருகே கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதையில் அடிக்கடி நீர் தேங்குவதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால், தேங்கும் நீரை உடனடியாக மின்மோட்டார்கள் கொண்டு வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் ஏற்படுத்தி தரவும், மூடப்பட்ட ரயில்வே கேட்டை மீண்டும் திறக்கவும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கனரக வாகனங்கள் செல்ல முடியாத குறுகலான பாதையாக சுரங்கப்பாதை இருப்பதால், இக்கட்டான சூழல்களில் பல கிலோ மீட்டர் தூரம் வாகனங்கள் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.

Exit mobile version