தமிழ் மொழியை, தமிழகத்தின் ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கன்னியாகுமரி முதல் சென்னை வரை தமிழூர்தி பயணம் இன்று துவங்கியது.
தமிழ்நாட்டில் துறைதோறும் தமிழ் வேண்டும், எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற நிலை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலக பன்னாட்டு தமிழுறவு மன்றம் சார்பில் கடந்த 26 ஆண்டுகளாக தமிழூர்த்தி பயணம், சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 27 வருடமாக, கன்னியாகுமரி காந்தி மண்டபம் முதல், சென்னை கோட்டை வரையிலான தமிழூர்த்தி பயணம் துவங்கியுள்ளது. கன்னியாகுமரியில் தொடங்கும் இந்த பயணம் வரும் 3 ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது. உலக பன்னாட்டு தமிழுறவு முனைவர் சேதுராமனின் தலைமையில் நடைபெறும் இந்த பயணத்தில் தமிழறிஞர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.