இலங்கையில் ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையை, போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்ற வலியுறுத்தி கொழும்புவில் பேரணி நடைபெற்றது.
ஈஸ்டர் தினத்தில் தாக்குதல் நடத்திய தீவிரவாத அமைபுகளோடு தொடர்பு வைத்திருந்த போதைப்பொருள் கடத்தல் காரர்கள் 4 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு மரண தண்டனை விதிப்பதாக அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்தார். இதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதையடுத்து, மரண தண்டனையை நிறைவேற்றகோரி கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயத்தில் இருந்து பேரணி நடைபெற்றது. எந்தத் தடை வந்தாலும் மரண தண்டனையை நிறைவேற்றும் தீர்மானத்திலிருந்து பின்வாங்க வேண்டாம் என அதிபர் சிறிசேனவுக்கு பேரணியில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.