வேதாரண்யத்தில் கஜாவினால் பாதிக்கப்பட்ட கயிறு தொழிற்சாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை

கஜா புயலின் தாக்கத்தால் வேதாரண்யத்தில் முடங்கி உள்ள கயிறு தொழிற்சாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சுற்றியுள்ள புஷ்பவனம், குரவப்புலம் ஆகிய பகுதிகளில் தென்னை மட்டை மற்றும் பனை மட்டையில் இருந்து உற்பத்தி செய்யப்படும் கயிறு தொழிற்சாலைகள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் கயிறுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தொழிற்சாலைகள் லாபகரமாக இயங்கி வந்த நிலையில், கஜா புயலின் தாக்கத்திற்கு பிறகு, கடந்த ஆறு மாத காலமாக கயிறு தொழில் முடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை இழந்துள்ளதாகவும், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தொழில்சாலைகளில் கடன்களை ரத்து செய்து, அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version