மக்கள் அனைவரும் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டுகோள்

மக்கள் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.

சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் உள்ள இல்லத்தில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மறைந்த முதலமைச்சர்கள் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா, தாயார் தவுசாயம்மாள் ஆகியோரின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.

image

அதைத் தொடர்ந்து, முதலமைச்சர் தனது குடும்பத்தினருடன் வாக்களிப்பதற்காக சிலுவம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நடந்தே சென்றார்.

image

பின்னர், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, முதலமைச்சர் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களித்து, தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

image

Exit mobile version