அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்க கோரிக்கை

அதிமுக ஆட்சியில் கொரோனா ஊரடங்கின் போது அம்மா உணவகங்கள் மூலம் இலவச உணவு வழங்கியதுபோல், தற்போதும் வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சென்னை மாநகரில் சாலையோரம் மற்றும் பாலங்களுக்கு கீழ் ஆயிரக்கணக்கான யாசகர்கள் மற்றும் வீடு இல்லாத கூலித் தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.

முழு ஊரடங்கு காரணமாக உணவு இன்றி தவிக்கும் இவர்களுக்கு பல தன்னார்வலர்கள் மூன்று வேளையும் உணவு வழங்கி வருகின்றனர்.

இருப்பினும் பலர் உணவு கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியின் போது, ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் மூலம் 3 வேளை இலவச உணவு வழங்கப்பட்டது.

அதேபோல் தற்போதும் இலவச உணவு வழங்கினால் பசியில் தவிப்பவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் என தன்னார்வலர்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version