கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில், கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு ஆட்சியரிடம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த ஊராட்சிகளுக்கு நீர் வழங்கும் திட்டமான, கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை, விரைந்து செயல்படுத்தக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர். தடப்பள்ளி-அரக்கன்கோட்டை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகள் மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் தலைமையில், நடைபெற்ற இந்த மனு வழங்கும் நிகழ்வில் அனைத்துக்கட்சி உறுப்பினர்கள், விவசாயிகள் ,பொதுமக்கள் உள்ளிட்ட 2000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.மேலும் இந்த கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வழியுறுத்தி பெருந்துறை மக்கள் சார்பில் முதல்வரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version