தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ள திருவாரூரில் கஜா புயல் நிவாரணம் வழங்க அனுமதி கோரி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
கஜா புயல் டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்டது. அதிலும் திருவாரூரில் புயல் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் தமிழக அரசு முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் தொகுதியில் வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளதால் புயல் நிவாரணம் வழங்க இயலவில்லை. இந்நிலையில் திருவாரூரில் கஜா புயல் நிவாரணம் வழங்க அனுமதி கோரி தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மத்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். கஜா புயல் திருவாரூரில் இதுவரை கண்டிராத சேதத்தை ஏற்படுத்தியுள்ளதால் நிவாரணம் வழங்க அனுமதி கோரி கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.