ராமநாதபுரம் மாவட்டம், கீழ்க்காஞ்சிரங்குளம் கிராமத்திற்குள் பேருந்து வசதி ஏற்படுத்தித்தரக்கோரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முதுகுளத்தூர் அருகேயுள்ள கீழக் காஞ்சிரங்குளம் கிராமத்திற்கு போதிய பேருந்து வசதியின்றி, கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. கிராம மக்கள் பல்வேறு வேலை நிமித்தமாக, பரமக்குடி, முதுகுளத்தூர், கமுதி, கடலாடி, அருப்புக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.இந்த நிலையில், இவர்களின் வசதிக்காக, முதுகுளத்தூர் – கமுதி வழியாக, பேருந்து இயக்கப்படுகிறது. இவை தவிர, தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இப்பேருந்துகள், முக்கிய சாலையில் செல்வதால் இக்கிராம மக்கள் அத்தியவசிய தேவைக்காகவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பேருந்துக்காக தங்களது கிராமத்திலிருந்து முக்கிய சாலைக்கு 2 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டிய சூழல் உள்ளதால் மாணவர்களின் வசதிக்காக காலை, மாலை நேரங்களில் மட்டும் கிராமத்திற்குள் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.