குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கு கொள்வதற்காக பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ இந்தியா வருகை தந்துள்ளனர்.
நாடு முழுவதும் குடியரசு தினவிழா வரும் 26-ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பல்வேறு நாட்டு தலைவர்கள் கலந்து கொள்வது வழக்கம்.
இந்த வருடம் பிரேசில் அதிபர் ஜேர் போல்சனரோ குடியரசு தினவிழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க டெல்லி வந்தடைந்தார். அவருக்கு இரு நாட்டு தூதரக அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பிரேசில் அதிபர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்களை சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், இருநாடுகளுக்கு இடையே 15 ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.