குடியரசுத் தினத்தை முன்னிட்டு டெல்லியில் முப்படைகளின் அணிவகுப்பு ஒத்திகை

குடியரசுத் தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

வரும் 26-ம் தேதி இந்தியா முழுவதும் குடியரசுத் தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. தலைநகர் டெல்லியில் கொண்டாடப்படவுள்ள குடியரசுத் தினவிழாவில் குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தநிலையில், டெல்லியில் உள்ள ராஜ்பாத்தில் முப்படைகளின் மிடுக்கிடும் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. அதி நவீன போர் தடவாளங்களும், ராணுவ வாகனங்களும் இதில் அணிவகுத்து வந்தன. நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் இந்த அணிவகுப்பு ஒத்திகையை இருபுறங்களிலும் நின்று, ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Exit mobile version