முதலமைச்சரின் வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கங்கள், அரசு பள்ளி உதவி ஆசிரியர் முல்லை, கால்நடை மருத்துவர் பிரகாஷ், ரயில் வண்டி ஓட்டுநர் சுரேஷ், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த புகழேந்திரன் ஆகிய 4 பேருக்கு வழங்கப்பட்டது. கோட்டை அமீர் மத நல்லிணக்க விருது கோவையைச் சேர்ந்த அப்துல் ஜபாருக்கும், திருத்திய நெல்சாகுபடி நாராயணசாமி நாயுடு விருது செல்வக்குமாருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
கள்ளச்சாராய ஒழிப்பு பணியில் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றியமைக்காக, காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி, காவல் உதவி ஆய்வாளர் செல்வராஜூ, தலைமை காவலர்கள் சண்முகநாதன், ராஜசேகரன் ஆகிய 4 பேருக்கு காந்தியடிகள் காவலர் விருதை முதலமைச்சர் வழங்கினார். மேலும் சிறந்த காவல்ந் இலையங்களுக்கான விருதை சேலம், திருவண்ணாமலை, சென்னை கிழக்கு ஜே 4, கோட்டூர்புரம் காவல் நிலையங்களுக்கு வழங்கப்பட்டது. பின்னர் விருது மற்றும் பதக்கங்கள் பெற்றவர்களுடன் முதலமைச்சர் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.