இந்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் பலியாகியிருக்கலாம் என தகவல்

பாகிஸ்தானின் பாலகோட்டு பகுதியில் இந்திய விமான படை நிகழ்த்திய தாக்குதலில் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடிக் கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் புகுந்து இந்திய விமான படை தாக்குதல் நடத்தியது. மிராஜ் 2 ஆயிரம் ரக போர் விமானங்களை பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 200 முதல் 300 தீவிரவாதிகள் வரை பலியாகியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அவசர கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

Exit mobile version