மெரினா கடற்கரை பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து அறிக்கை -சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

மெரினா கடற்கரை பராமரிப்புக்கு ஒதுக்கப்படும் நிதி குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிமுறைகளை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் மெரினாவில் அனுமதியின்றி இயங்கும் கடைகளை அகற்றவும், கடற்கரையை சுத்தப்படுத்தவும் உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

மெரினா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணியில் 250 பணியாளர்கள் காலை, பிற்பகல், இரவு என மூன்று வேளைகளும் துப்புரவு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளதாக மாநகராட்சி அறிக்கை தாக்கல் செய்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மெரினாவை பராமரிக்க ஒதுக்கப்படும் நிதி, மேற்கொள்ளப்படும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து அறிக்கையை தாக்கல் உத்தரவிட்டு, வழக்கை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Exit mobile version