டிஎன்பிஎல் போட்டியில் சூதாட்டத்திற்கு அழைப்பு விடுத்த நபர் குறித்து பிசிசிஐயில் புகார்

டிஎன்பிஎல் போட்டிகளில் விளையாடிய தமிழக வீரர்களை மேட்ஜ் பிட்சிங்கில் ஈடுபட அழைத்த மர்மநபர்கள் குறித்து பிசிசிஐ லஞ்ச ஒழிப்பு துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2019 ஆம் ஆண்டு டிஎன்பிஎல் போட்டிகளில் பங்கேற்ற தமிழக வீரர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளார். சூதாட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இருந்த வாட்ஸ் அப் தகவல் குறித்து பிசிசிஐ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரருக்கு புகாரளிக்கப்பட்டது. இந்தப் புகார் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பிசிசிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தெரிவித்த பிசிசிஐ அதிகாரி அஜித் சிங், வீரர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளதாகவும் வாட்ஸ் ஆப்பில் தகவலளித்த மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். முறைகேட்டில் ஈடுபட்டது தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிசிசிஐ அதிகாரிகள் தெரிவித்தனர்

Exit mobile version