தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு நிறைவு

மக்களவை தேர்தலையொட்டி தமிழகத்தின் 13 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவு நிறைவுபெற்றது

மக்களவை தேர்தலுக்கான 7ம் கட்ட மற்றும் கடைசி கட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை 13 வாக்குச்சாவடிகளில் மறு வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன்படி மாலை 5 மணி நிலவரப்படி , பூவிருந்தவல்லியில் உள்ள 195வது வாக்குச்சாவடியில் 79.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. பெரியக்குளம் தொகுதிக்குட்பட்ட 197வது வாக்குச்சாவடியில் 61.42% வாக்குகளும் ஆண்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட 67வது வாக்குச்சாவடியில் 72.51% வாக்குகளும் பதிவாகியுள்ளன. பண்ருட்டியில் உள்ள 210வது வாக்குச்சாவடியில் 66% வாக்குகளும் காங்கேயம் தொகுதிக்குட்பட்ட 248வது வாக்குச்சாவடியில் 79.67% சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. பாப்பிரெட்டிபட்டி தொகுதிக்குட்பட்ட 181வது வாக்குச்சாவடியில் 81.98% வாக்குகளும் 182வது வாக்குச்சாவடியில் 89.41% வாக்குகளும் பதிவாகின. நத்தமேடு பகுதியில் அமைந்துள்ள 192வது வாக்குச்சாவடியில் 83.44%வாக்குகளும் 193வது வாக்குச்சாவடியில் 86.73% வாக்குகளும் 194வது வாக்குச்சாவடியில் 82.95% வாக்குகளும், 195வது வாக்குச்சாவடியில் 91.84% வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதேபோல் 196வது வாக்குச்சாவடியில் 87.89% வாக்குகளும் 197வது வாக்குச்சாவடியில் 88.47% வாக்குகளும் பதிவானது.

Exit mobile version