ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைப்பு – ஆர்.பி.ஐ

வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்துள்ளதன் மூலம் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

மும்பையில் நிதிக் கொள்கை தொடர்பாக ஆர்.பி.ஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இதில் வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டாக குறைக்கப்படாமல் இருந்த ரெப்போ வட்டி விகிதம் புதிதாக பொறுப்பேற்ற ஆளுநர் சக்திகாந்த தாஸ் தலைமையில் நடைபெற்ற முதல் கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வங்கிகளில் வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

Exit mobile version