பெரிய நாயகி அம்மன் சன்னதி கோபுர கலசத்தை சரிசெய்ய வேண்டும் -பக்தர்கள் கோரிக்கை

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சாய்ந்திருக்கும் பெரிய நாயகி அம்மன் சன்னதி கோபுர கலசத்தை சரிசெய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தஞ்சாவூர் பெரிய கோயில் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் நவராத்திரி காலங்களில் தஞ்சாவூர் பெரிய கோவிலில் உள்ள பெரிய நாயகி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும்.இந்தநிலையில் பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பெரிய நாயகி அம்மன் சன்னதியின் கோபுர கலசம் சாய்ந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்திருக்கும் பக்தர்கள், கோபுர கலசத்தை சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Exit mobile version