அமெரிக்க நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா நீக்கம்

நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்தியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளை அமெரிக்கா நீக்கியுள்ளது.

உலகம் முழுவதிலும் உள்ள சில முக்கிய நாணயங்களை அமெரிக்காவின் கருவூலத்துறை தனது கண்காணிப்பு பட்டியலில் வைத்துள்ளது. உலகில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் நாணயங்கள் இந்த பட்டியலில் இடம்பெறும். மேலும் அதன் சர்வதேச மதிப்பு, தாக்கத்தை வைத்து இந்த பட்டியலில் சேர்க்கப்படும். அதன்படி, சீனா, ஜெர்மனி, ஜப்பான், தென்கொரியா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளின் நாணயங்கள் இந்த பட்டியலில் உள்ளது. இந்தியாவின் ரூபாயும் இந்த பட்டியலில் இருந்துவந்தது.

இந்நிலையில், இந்தியாவின் சில நடவடிக்கைகளின் அடிப்படையில், நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து இந்திய ரூபாய் நீக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கருவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 40 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில், சுவிட்சர்லாந்தும் நாணய கண்காணிப்பு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் சீனா, ஜப்பான், தென்கொரியா, இத்தாலி, ஜெர்மனி, அயர்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளை நாணய கண்காணிப்பு பட்டியலில் தொடர்ந்து அமெரிக்கா வைத்துள்ளது.

Exit mobile version