அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் நீக்கியது செல்லாது -உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சிபிஐ முன்னாள் இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் நீக்கியது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியது. இருவரும் பரஸ்பரம் ஊழல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். இதையடுத்து அக்டோகர் 23ஆம் தேதி அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது. அதேபோன்று, சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானாவையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது.

இதையடுத்து சிபிஐ இணை இயக்குநர் நாகேஸ்வர ராவ், இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டார். மத்திய அரசு நடவடிக்கைக்கு எதிராக அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். கடந்த டிசம்பர் 6ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அதில், அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பியது தவறு என்றும் மத்திய அரசின் உத்தரவு செல்லாது என்றும் உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது. மேலும், அலோக் வர்மா சிபிஐ இயக்குனராக தொடர எந்த தடையும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Exit mobile version