சென்னையில் 40 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றம்

சென்னையில் 40 டன் பட்டாசுக் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பொதுமக்கள் பட்டாசுகளை வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.

இந்நிலையில் சென்னையில் பட்டாசுகளை வெடித்ததில் ஏற்பட்ட குப்பைகளை அகற்றுவதற்காக 19 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

200 வார்டுகளில் 45 சரக்கு வாகனங்கள் மூலம் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று 40 டன் பட்டாசு குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version