பூலாம்பட்டியில் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றம்

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறைக்கு சொந்தமான இடங்களை சிலர் ஆக்கிரமித்து வீடுகள், கடைகள் கட்டியுள்ளதாக புகார் எழுந்தது. இதனால் பேருந்து மற்றும் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை மூலம் நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருந்ததையடுத்து, உதவி ஆட்சியர், மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் அகற்றப்பட்டன.

Exit mobile version