நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பு கட்டடம் அகற்றம்

வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் அரசுக்கு சொந்தமான காலியிடத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கட்டிய கட்டட கட்டடம் கட்டி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அம்மன் நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே கோயில் நிலமும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அரசுக்கு சொந்தமான காலியிடமும் உள்ளது. இந்த இடத்தை திமுக கிளை செயலாளர் சிவா என்பவர் ஆக்கிரமித்து கட்டடம் கட்டி வருவதாகவும், இதனை தட்டிக் கேட்கச் சென்ற பொதுமக்களை மிரட்டுவதாகவும் புகார் எழுந்துள்ளது. யாரிடம் புகார் கொடுத்தாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாது எனக் கூறும் திமுக பிரமுகர் மீது உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்நிலையில், நியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக, வேலூர் மாவட்டம் மேல்மொணவூரில் அரசுக்கு சொந்தமான காலியிடத்தை திமுக பிரமுகர் ஆக்கிரமித்து கட்டிய கட்டடத்தை இன்று அதிகாரிகள் இடித்து தள்ளினர்.

Exit mobile version