தீபாவளி பண்டிகையையடுத்து, சென்னையில் 5300 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டு பட்டாசுகள் வெடிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், குறிப்பிட்ட காலநேரத்தில் மக்கள் அதிகளவில் பட்டாசுகளை வெடித்துள்ளனர்.
தீபாவளியையடுத்து சென்னையில், நேற்று முதல் பட்டாசு குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன. கும்மிடிப்பூண்டி அருகில் கழிவுகளை சேகரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீபாவளியையடுத்து 5 ஆயிரத்து 300 டன் பட்டாசுக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.