தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும், 422 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்திருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கத்தினர் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், அரசு பணிகள் மற்றும் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு தரப்பினரும் இந்த வேலைநிறுத்தத்திற்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
அரசின் எச்சரிக்கையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டு வரும்நிலையில், தற்போது மாவட்ட வாரியாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 422 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
திங்களன்று பணிக்கு திரும்பினால், ஒழுங்கு நடவடிக்கை கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. NO WORK NO PAY என்ற அடிப்படையில் மட்டும் நடவடிக்கை இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.