கோவை வெரைட்டி ஹால் சாலையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் மதுப்பிரியர்கள் காத்திருந்தனர். அப்போது அங்கு வந்த கார்த்திக் என்ற பொறியாளர்,
சமூக இடைவெளியை கடைப்பிடித்து மதுபாட்டில்கள் வாங்குவதற்கு ஒரு ரிமோட்
ரோபோவை இயக்கினார். ரிமோட் மூலம், அந்த வாகனத்தை இயக்கி மதுபாட்டில்களை வாங்க பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தார். மதுக்கடை கவுண்டர்களுக்கு மனிதர்கள் சென்று வாங்குவதற்கு பதிலாக, இந்த ரிமோட் ரோபோவிடம் உரிய பணத்தைக் கொடுத்து அனுப்பினால், மதுபாட்டில்களை அதுவே வாங்கி வரும் என்றும், இதனால் சமூக இடைவெளி முறையாக கடைபிடிக்கப்படும் என்றும் கார்த்திக் கூறுகிறார். கொரோனாவால் பாதிக்கபட்டவர்களுக்கு உணவு, மருந்து போன்றவற்றை கொடுப்பதற்காக கண்டுபிடிக்கபட்ட இந்த ரோபோ காரை பயன்படுத்தி, சமுக விலகலை முழுமையாக கடைபிடிக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.