4-வது நாளாக ரெம்டெசிவிர் மருந்தை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், ரெம்டெசிவிர் மருந்தை பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கிச் சென்றனர்.

ரெம்டெசிவிர் மருந்து அனைவருக்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் வகையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

ரெம்டெசிவிர் மருந்து வாங்க சென்னை மட்டுமின்றி, வேலூர், கடலூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் ஏராளமானோர் வருகை தந்ததால், மருத்துவமனைக்கு வெளியேயும் வரிசை சென்றது.

இதனையடுத்து கூடுதலாக இரு கவுண்டர் அமைத்து, மொத்தம் 4 கவுண்டர்கள் மூலம் மருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று மருந்து வாங்க முடியாமல் டோக்கன் பெற்றுச் சென்றவர்களுக்காக, தனிவரிசை ஏற்பாடு செய்யப்பட்டது.

கொரோனா சிகிச்சையில் இருப்பவர்களின் விவரம், சிடி ஸ்கேன், ஆதார் தகவல்களை கொடுத்து ரெம்டெசிவர் மருந்தை பெற்றுச் செல்லலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Exit mobile version