மறுமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை

மதுரையில், கணவர் இறந்து ஓராண்டுக்குள் மறுமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை, 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…

மதுரை மாவட்டத்தில் சிம்மக்கல் அருகே அனுமன் படித்துறை பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் இவருடைய மனைவி மகேஸ்வரி. உடல்நல குறைவின் காரணமாக முத்துக்குமார் ஓராண்டுக்கு முன்பு இறந்துள்ளார்.இதனால் அதே பகுதியைச் சேர்ந்த கௌதம் என்ற இளைஞரை மகேஸ்வரி திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

நேற்று முன்தினம் மகேஸ்வரி வீட்டில் தனியாக இருந்த சமயம் பார்த்து மகேஸ்வரியின் கணவன் முத்துக்குமாரின் அண்ணன் குமார் மற்றும் அவருடன் 4 பேர் மகேஸ்வரி வீட்டிற்கு வந்து…என் அன்னான் முத்துக்குமார் இறந்து சில மாதங்கள் தான் ஆகி இருக்கின்றது. அதற்குள் எப்படி நீ மறுமணம் செய்து கொள்ளலாம் என கூறி பிரச்சனை செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் ஆனது உச்சநிலையை அடைய ஆத்திரம் தாங்காத குமார் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மகேஸ்வரியை ஓட ஓட விரட்டி வெட்டியுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மகேஸ்வரிக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மகேஸ்வரியின் இரண்டாவது கணவர் கௌதமின் நண்பரான குருநாத சேதுபதி என்பவர் நேற்று மாலை மருத்துவமனையில்
சிகிச்சையிலிருந்த மகேஸ்வரியை பார்த்துவிட்டு திரும்பியபோது

5பேர் கொண்ட மர்மகும்பல் ஒன்று இளைஞர் குருநாதசேதுபதியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து ஒரு கும்பல் தங்களது குடும்ப உறுப்பினர்களை திட்டமிட்டு கொலை செய்வதாக மகேஸ்வரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திவரும் காவல்துறையினர் குற்றவாளிகளை தேடிவருகின்றனர்.

Exit mobile version