அசாம் மொழியில் ரீமேக் ஆன விஜய் படம் : பாராட்டிய அசாம் முதல்வர்

அசாமில் வெளியாகியுள்ள ‘ரத்னாகர்’ திரைப்படத்தை அம்மாநில முதல்வர் வெகுவாக பாராட்டியுள்ளார்.

அசாமின் சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படும் ஜதின் போரோ நடித்த இப்படம் கடந்த மாதம் 11ம் தேதி வெளியானது. இந்த படத்தின் கதை தமிழில் நடிகர் விஜய்- இயக்குநர் அட்லி முதல் முறையாக இணைந்த “தெறி” படத்தின் ரீமேக் ஆகும்.முதலில் இந்த படம் அசாமில் உள்ள 59 தியேட்டர்களிலும், அடுத்தடுத்த வாரங்களில் வடகிழக்கு மாநிலங்களிலும் வெளியானது.

இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர், ‘ரத்னாகர்’ திரைப்படம் ரூ.10 கோடி வசூல் சாதனை புரிந்துள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கு முன்னாடி எந்த திரைப்படமும் இத்தகைய சாதனையை புரிந்ததில்லை. வசூல் சாதனை படைத்து அசாம் திரைத்துறையினருக்கு பெருமை சேர்ந்துள்ளதாக அம்மாநில முதல்வர் பாராட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் படம் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்துள்ளதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்

Exit mobile version