ஏர்வாடியில் மதநல்லிணக்க சந்தனக் கூடு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாநிலங்களிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா அமைந்துள்ளது. இங்கு 845 வது சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தப்படு, இந்த சந்தனக்கூடு விழாவில் 40 அடி உயரமுள்ள அடிமரம் ஊன்றப்பட்டு, மேள தாளங்கள் முழங்க சந்தக் கூடு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. குதிரைகள் மற்றும் யானை முன்னே செல்ல ரத ஊர்வலம் தர்காவை மூன்று முறை சுற்றி வலம் வந்ததை அடுத்து வான வேடிக்கையுடன் கொடியேற்றம் நடைபெற்றது. இந்த விழாவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.